December 16, 2016
தண்டோரா குழு
சூரிய மின்தகடு ஊழல்வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுசிறைத்தண்டனை வழங்கி பெரும்பாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சூரிய மின் சக்தி இணைப்பு தருவதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக நடிகை சரிதா நாயர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிஜு ராதாகிருஷ்ணன்மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மீது குற்றம்சாட்டபட்டு இருந்தது.
இதையெடுத்து கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த பெரும்பாவூர் நீதிமன்றம்,நடிகை சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்து இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.