January 12, 2018 தண்டோரா குழு
சவூதி அரேபியாவில் முதல்முறையாக பெண்களுக்கான கார் ஷோரூமை தனியார் கார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட அந்நாட்டு இளவரசர் சல்மான் கான் அனுமதி அளித்த நிலையில் முதல்முறையாக பெண்களுக்கான கார் ஷோரூம் ஒன்றை தனியார் கார் நிறுவனம் தொடங்கியுள்ளது.இந்த புதிய ஷோரூம் ஜெட்டாவில் உள்ள ஷாப்பிங் மாலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கார் தயாரிப்பாளர்கள் தயாரித்த கார்கள் அந்த ஷோரூமில் உள்ளன. பெண்கள் தங்களுக்கு பிடித்த காரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த ஷோரூமில் பெண்கள் மட்டுமே பணிபுரித்து வருகின்றனர்.இதன் மூலம் பெண்கள் தாங்கள் விரும்பிய காரை தேர்வு செய்து ஓட்டலாம். கார் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் உதவி பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்,சவூதி அரேபியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் கார் ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.