• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்க்கண்டேயகட்ஜுவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

October 17, 2016 தண்டோரா குழு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நீதிமன்றத்தில் ஆஜராகி விவாதிக்க தயாரா என உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் சவுமியா என்ற மாணவி 2011ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு திருச்சூர் விரைவு நீதிமன்றம், கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது.

அதை எதிர்த்து கோவிந்தசாமி கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2013-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த நிலையில், கடந்த மாதம் கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து, குற்றவாளிக்குத் தண்டனை குறிக்கப்பட்டதை ஆட்சேபித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கேண்டேய கட்ஜு தண்டனை குறைப்பு குறித்து நீதிபதிகள் நேரடி விவாதத்துக்குத்தயாரா ? என தனது முகநூல் மூலம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில்,கட்ஜுவின் பதிவு குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.பந்த் மற்றும் யு.யு. லலித் ஆகியோர்,கட்ஜு மீது தாங்கள் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும், அவர் நீதிமன்றத்திற்கு வந்து தீர்ப்பில் இருக்கும் தவற்றைச் சுட்டிக்காட்டி வாதிடத்தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கட்ஜுவின் வாதத்திற்கு பிறகே, சவுமியாவின் தாயார் மற்றும் கேரள அரசு
தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்த முடியும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து ஒருவர் சவால் விடுப்பது போல கருத்து தெரிவிப்பதும், அதை ஏற்று அதில் தொடர்புடைய நபரை உச்சநீதிமன்றம் வாதத்திற்கு அழைத்ததுள்ளதும் உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க