August 8, 2016 தண்டோரா குழு
தேசீயகீதம் பாடுவதற்குத் தனியார் பள்ளி ஒன்றில் தடைவிதிக்கப்பட்டது. அதையடுத்து 8 ஆசிரியர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கும் பொருட்டு ராஜினாமா செய்தனர்.
அலகாபாத்தை அடுத்த சைதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி மேலாளரும், உரிமையாளருமான ஸியாஉல் ஹக் தனது பள்ளி மாணவர்கள் தேசிய கீதம், சரஸ்வதி வந்தனம், மற்றும் வந்தேமாதரம் போன்ற பாடல்கள் பாடுவதற்குத் தடை விதித்தார்.
இப்பள்ளியில் 330 மாணவ மாணவிகளும் 20 ஆசிரியர்களும் உள்ளனர். பள்ளித் தலைமை ஆசிரியை ரிடு ஷுக்லா சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த ஒத்திகை செய்யும் போது, தேசியக் கொடி ஏற்றிய பின் தேசியகீதம் பாடவும், கல்விக் கடவுள் சரஸ்வதியை வணங்கவும், பிறந்த பொன்நாட்டை வணங்கும் முகமாக வந்தே மாதரம் இசைக்கவும் குழந்தைகளைத் தயார் செய்துள்ளார்.
ஆனால் பள்ளி உரிமையாளர் தனது பள்ளியில் இத்தகைய கீதங்களை அனுமதிக்க மறுத்துள்ளார். தன்னுடைய கட்டளைக்கு அடி பணிய மறுப்பவர்கள் வேலையை ராஜினாமா செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பயனாகத் தலைமை ஆசிரியர் உட்பட 8 பேர் பதவி விலகியுள்ளனர்.
தேசிய கீதத்தில் வரும் சில வரிகள், தாய் நாடு கடவுளுக்கும் மேலானது எனத் தெரிவிக்கிறது. ஆனால் விதியை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தியான
அல்லாவை விட பெரியது எதுவுமில்லை. ஆகையால் இக்கருத்தைத் தீவிரமான இஸ்லாமியரால் ஏற்கமுடியாது என்று, ஸியாஉல் ஹக் தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.
எந்தப் பள்ளியும் தேசீய கீதத்தையோ, அல்லது தேசபக்திப் பாடல்களையோ பாடத் தடைசெய்ய இயலாது. இது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது, தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி ஜெய்கரன் யாதவ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தைத் தீர விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று
தலைமைச் செயலர் டீபக் சின்கல் கூறியுள்ளா