• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்லாமிய விரோதி ஹஃபிஸ் சைஈட்ஐப் புறக்கணியுங்கள், பரெல்வி பள்ளி வேண்டுகோள்

August 19, 2016 தண்டோரா குழு

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜமாட் உட் டவஹ் (JuD) அமைப்பின் தலைவர் ஹஃபிஸ் சைஈட்ஐ இஸ்லாம் சமுதாயத்திலிருந்து தள்ளிவைப்பதாக இஸ்லாம் பரெல்வி பிரிவைச் சேர்ந்த முஃப்டி மொஹம்மெட் சலீம் பரெல்வி பள்ளி பிரகடனப் படுத்தியுள்ளது.

சைஈட், லஷ்கர் இ டொய்பா(LeT) அமைப்பைத் தோற்றுவித்தவர். அவரது தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டவர்.உத்திரப்பிரதேசத்தில் பரெய்ல்ல்யிலுள்ள இஸ்லாம் பள்ளியின் மதகுரு தனது ஃவட்வாவில் சைஈட் ஐப் பின்பற்றுவதும் குற்றம் என்றும் கூறியுள்ளார்.இஸ்லாமிய மதகுருவோ, இஸ்லாம் பள்ளியால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியோ, அல்லது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளை மொழி பெயர்பவர்களோ தெரிவிக்கும் தீர்மானமே ஃவட்வா ஆகும்.

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சைஈட் உரையாற்றினார்.அப்போது பிரிவினைக்கு முன்பு காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைவதையே விரும்பினர் என்றும், பிரிவினைக்குப் பின்பு இந்தியா வலுக்கட்டாயமாக ராணுவத்தை ஜம்மு அண்ட் காஷ்மீருக்கு அனுப்பியது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவிற்குப் பாடம் புகட்ட ராணுவத்தை இந்தியாவிற்கு அனுப்பும் படி தலைமைத் தளபதி ரஹீல் ஷரிஃப் பை சைஈட் கோரியுள்ளார்.

ஜெய்ப்பூரின் மொஹமெட் மொய்னுட்டின் கேள்விக்குப் பதிலளிக்கையில், டர்ஹா அலா ஹஸ்ரட் ஐச் சார்ந்த மன்ஸேர் இ இஸ்லாம் சௌடகரன் நிறுவனம் இத்தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சைஈட்க்கு இஸ்லாம் மதத்துடன் எந்தத் தொடர்புமில்லை.ஏனெனில் ‘அல்லாவையும்’ முகமது நபியைப்பற்றியும் எதிராக எழுதியவர்களை இஸ்லாமியர் எனக் கூறுவது ஏற்புடையதுதன்று.அதுமட்டுமன்றி இஸ்லாமிய கோட்பாடுகளுக்கெதிராகவும், பயங்கரவாதத்தை மக்களிடையே தூண்டுபவர்களும் உண்மையான இஸ்லாமியர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகையால் அத்தகைய மனிதர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வது இஸ்லாமிய விதிப்படி குற்றம்,அல்லாவால் தடை செய்யப்பட்டதும் ஆகும் என்று முஃப்டி சலீம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானது,ஆகையால் அத்தகைய கோட்பாடுகளைப் பின்பற்றும் சைஈட் இஸ்லாமிய சமுதாயத்திற்கே இழுக்கை ஏற்படுத்துபவர் என்பதால் அவரது தொடர்பையும், அவரது கருத்துக்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பதே ஃவட்வாவின் சாராம்சம்.

மேலும் படிக்க