• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடலுள் கப்பல் செலுத்தும் சாதனை பெண்கள்.

June 6, 2016 தண்டோரா குழு

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலம் மாறிவிட்டது. குடும்பத்தைப் பார்த்து கொள்வதும், குழந்தைகளைப் பெற்று அதை வளர்ப்பது தான் அவள் கடமை என்ற நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஆணுக்கு இணையாகப் பணி செய்வதும், குடும்பத்தையும் பணியையும் சரிவரச் சமாளிக்கும் பலத்தையும் தற்போதைய பெண்கள் பெற்று உள்ளனர்.

இது ஆணுக்குரியது, இது பெண்ணுக்குரியது என்று எப்பணியையும் ஒதுக்கீடு செய்ய இனி முடியாது. காரணம், எல்லாப் பணியையும் பெண்கள் செய்ய தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதைப் பெண்ணால் செய்ய முடியாது என்று எந்த வேலையையும் இனி ஒதுக்க முடியாது. எந்த ஆபத்தான பணியானாலும் அதையும் செய்ய பெண்கள் தயாராக உள்ளனர். இதற்கு இப்போதைய உதாரணம் பேருந்து, ரயில், விமானம், கப்பல் போன்ற போக்குவரத்து சாதனங்களை பெண்களே இயக்குகின்றனர்.

மாதய் என்கிற கப்பலின் தலைவி வர்திகா ஜோஷி, இக்கப்பல் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இதில் வர்திகா தலைமையில் சுவாதி, பிரதிபா ஜம்வால், விஜயதேவி, பாயல் குப்தா, ஐஸ்வர்யா என ஐந்து பெண்கள் அனைத்துப் பணிகளையும் பொறுப்பாக கவனித்துக் கொள்கின்றனர்.

விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கடற்படை கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக கோவாவில் இருந்து புறப்பட்டனர். கொச்சி மற்றும் சென்னை போன்ற இடங்களை விஜயம் செய்த பிறகு மீண்டும் கோவா துறைமுகத்திற்குத் திரும்பினர்.

இந்த அணி உலகம் முழுவதையும் சுற்றிவருவதற்கான கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்தச் சாதனையை 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப் போவதாக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள், சரக்குக் கப்பல்களுக்கு வழிகாட்டுவது, துறைமுகப் பணிகளில் ஈடுபடுவது எனப் பல பொறுப்புகள் இந்தக் கப்பலுக்கு உள்ளது. கடற் கொள்ளையர்களை எதிர்கொள்வது, எதிரிநாட்டுக் கப்பல்களை அடையாளம் காண்பது என இந்தக் கப்பலின் பணிகள் பெரிது. தற்போது அதனைப் பெண்கள் மட்டுமே இயக்குவது அற்புதம்.

நாட்டிற்குள் கடல் வழியாக அந்நியர்கள் ஊடுருவாமல் தடுப்பது, வெளிநாட்டுக் கப்பல்களை கண்காணிப்பது, சரக்குகளைக் கொண்டு செல்வது எனக் கடினமான பணிகள் கொடுக்கப் பட்டிருந்தாலும் அவற்றைத் திறமையாக செய்து முடித்து ஆற்றலை நிரூபித்திருக்கிறார்கள் இந்த வீராங்கனைகள். இவர்களின் திறமைகளை அறிந்தே மாதேய் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கடற்படை அதிகாரி ஒருவர்.

நிமிடத்துக்கு ஒருமுறை மாறும் கடல் வானிலை, ஆக்ரோஷத்துடன் எழும்பும் அலைகள், பெருகிவரும் கப்பல் போக்குவரத்து நெரிசல், பின் தொடரும் ஆபத்துகளை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது எனப் பயிற்சியின் போதே பல அம்சங்களில் பாராட்டு வாங்கியிருக்கிறது இந்தப் பெண்கள் படை.

இதைக் குறித்து அந்தக் கப்பலின் தளபதி டோண்டே, கடல் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் வித்தியாசப்படுத்திப் பார்க்காது. ஒரு மாலுமி மலுமி தான். அதனால் எப்பொழுதும் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், மாதேய் எங்கள் தாய்வீடு போன்றது என்றும் அதில் பணி செய்யும் எங்களிடம் நம் நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தந்து உள்ளனர். முதல்கட்ட பயணத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி தொடரும், இந்தக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வர ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம். அதுதான் எங்கள் இலக்கு என்று சற்றே அழுத்தமான குரலில் நம்பிக்கை பளிச்சிட கேப்டன் வர்திகா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க