May 10, 2016 வெங்கி சதீஷ்
வரலாற்றுக் காலங்களில் ஒருவர் பற்றி அவர் நல்லவரா கெட்டவரா எனத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில் அவரைப் பற்றி யாராவது ஒருவர் எழுதிவைத்துள்ள குறிப்புகளைப் பார்க்க வேண்டும்.
அதுவும் அந்த நபரின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்படும் என்பதால் கூடியவரை நல்ல விஷயங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டது. இதனால் அரசர்கள் காலத்தில் புரட்சி நடந்திருந்தாலோ ஒழிய மற்றவை அனைத்தும் நன்மையாகவே காட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிற்காலங்களில் ஓரிரண்டு நாளேடுகள் மட்டும் இருந்த காலத்தில் அதிகளவு நல்லவைகளோடு, குறிப்பிட்ட சில தவறான விசயங்களும் வெளிக்கொண்டுவரப்பட்டது.
ஆனால் அந்த காலத்தில் அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டிலேயே அனைத்தும் இருந்துவந்தால் பல நல்ல விஷயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது எண்ணிலடங்காத அளவில் ஊடகங்கள் இருப்பதால் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு தலைவரும் தவறான எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலை உள்ளது.
அதோடு சட்டதிட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பொதுவாழ்வில் உள்ள பலரது தனிப்பட்ட வாழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளது. அதில் பாரதப் பிரதர் முதல் கடைநிலையில் உள்ள கவுன்சிலர் வரை விதிவிலக்கல்ல. தற்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனையில் பிரதமரின் கல்வித் தகுதி தான் மிகப்பெரிய பிரச்சனையாக காட்டப்பட்டு வருகிறது.
அதே போல அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவரது குடும்ப வாழ்க்கை பற்றி பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. இதனால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் மிகுந்த ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் உச்சமாக ஒரு ஊடகம் இந்தியாவின் மகாத்மா என அழைக்கப்படும் காந்தியைப் பற்றியே தவறான கருத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல தென்னகத்து காந்தி காமராஜர் மீதும் களங்கம் கற்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது புகழ் இன்றுவரை மங்காமல் உள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் காரணமாக பல்வேறு தலைவர்கள் பற்றி அவதூறாகவும் ஆதராத்துடனும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன.
தேர்தலுக்கு முன்னமே அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்த ரமணா தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பு ஏற்படுத்தியதால் பதவியை இழந்தார்.
பின்னர் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும் சிம்லா தனது கணவருடன் நாகரீக உடையில் இருக்கும் படங்கள் வெளியாகின. இந்நிலையில் தி.மு.கவின் அனைத்துப் பிரச்சாரங்களையும் முறியடிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தி.மு.க பெண் நிர்வாகி ஒருவருடன் அந்தரங்கமாக இருக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது மிகவும் அருவருப்பாக இருந்தாலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவு பரவிவருகிறது. அதோடு இது தி.மு.கவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அது தான் இல்லை எனவும் இது போல தன் மரியாதையை கெடுக்கும் விதமான பிரச்சாரத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
அதே சமயம் இது அவரது தனிப்பட்ட விஷயம் இதில் நாங்கள் தலையிடப்போவதில்லை என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
எனவே நான்கு சுவருக்குள் நடக்கும் செயல்களே வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் இது போன்ற நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
எனவே பொது வாழ்க்கை என்று வந்தால் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கா விட்டால் என்றைக்கு இருந்தாலும் இது தான் நிலை என்பது சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.