• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு தலைக்காதலால் 22முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்

September 20, 2016 தண்டோரா குழு

ஒரு தலைக்காதலால் தலைநகர் டில்லியில் இளம் பெண்ணொருவர் இன்று காலை அவரது காதலனால் 22முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லியின் புராரி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கருணா(21).இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்லும்போது தனது வீட்டின் அருகில் சுரேந்திரர் என்பவரால் 22முறை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சுரேந்திரர் கருணாவை குத்துவதை முதலில் பார்த்த பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர்,சுதாரித்த பொதுமக்கள் கருணாவை அருகில் உள்ள ஐ.எஸ்.பி.டி மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாமாக உயிரிழந்தார்.

இதையெடுத்து பொதுமக்கள் தாக்கியதால் காயம் அடைந்த சுரேந்தர் அருகே உள்ள அருணா ஆசப் அலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுரேந்தர் சிங் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கருணாவை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும் இது தொடர்பாக நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டு பின்னர் இரு குடும்பங்களும் சமாதானமாகிச் சென்றதால் நடவடிக்கை கைவிடப்பட்டதகாவும் டில்லி வடக்கு காவல்துறை இணை ஆணையர் மதுர் வெர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது கருணாவைக் காதலிப்பதாக தெரிவித்த சுரேந்தர், வேறொரு வாலிபருக்கு கருணா தன்னுடைய புகைப்பபடங்களை அனுப்பியது தெரிந்தவுடன் கோபத்தில் கருணாவை சந்திக்க வந்துள்ளார்.அப்பொழுது தான் இந்த கொடூரம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுரேந்தரருக்கு ஏற்கனவே திருமணமாகி தற்பொழுது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது என்பதும், கருணா அவர் நடத்தி வந்த கணிப்பொறி பயிற்சி வகுப்பில் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க