• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உடல்நிலை சரியில்லாத தாயை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த மகன்

January 5, 2018 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் உடல் நிலை சரியில்லாத தாயை பெற்ற மகனே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றி வந்தவர் சந்தீப் நத்வானி. இவரது தாயார் ஜெர்ஸ்ரீபென் நன்வனி(64).இவர் தனது மகன் சந்தீப்புடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தஜெர்ஸ்ரீபென் கடந்த செப்டம்பர் 29ம் தேதி மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உடல்நிலை சரியில்லாத தனது தாய் மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டதாக சந்தீப் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கை காவல்துறையினா் மீண்டும் விசாரித்தனர். அப்போது, குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆராய்ந்தனர். அதில்,ஜெய்ஸ்ரீ உயிரிழந்த அன்று சந்தீப் ஜெய்ஸ்ரீயை வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்து செல்வதும், சிறிது நேரத்தில் சந்தீப் மட்டும் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து தன் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வதும் பதிவாகியுள்ளது.

சந்தீப் தனது தாய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தாயை கவனித்து கொள்வதில் சந்தீப்புக்கு சலிப்பு ஏற்பட்டு அது வெறுப்பாக மாறியுள்ளது.இதனால், தாயை கொலை செய்ததாக சந்தீப் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து தற்போது காவல்துறையினர் சந்தீப்பைகைதுசெய்து அவர் மீது IPC2013 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க