• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேந்தர் மூவிஸ் மதன் மாயமான வழக்கில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் கைது

August 26, 2016 தண்டோரா குழு

வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன விவகாரத்தில் நேற்று விடிய விடிய எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவிடம் நடந்த விசாரணையில் அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்தின் நெருங்கிய நண்பரான மதன், வேந்தர் மூவிஸ் என்கிற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மே 28ம் தேதி அவர் மாயமானார். இதையடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம்பெற்றுத் தருவதாகக் கூறித் மதன் தங்களிடம் பணம் பெற்றதாக 102 பேர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதிலும், சிலரது புகாரில் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை நேரில் சந்தித்து விட்டு அவரது பரிந்துரை பேரிலேயே மதனிடம் பணம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், மதனைக் கண்டுபிடித்து தரும்படி அவரது தாயார் தங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து மாயமான மதன் எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்பதை 3 மாதங்களாகியும்
கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரிக்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனை நீதிமன்றம் நியமித்தது.

இந்தநிலையில், நேற்று மாலை முதல் சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றபிரிவு அலுவகத்தில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்ச முத்துவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு முழுவதும் குற்றப்பிரிவு அலுவலகத்திலேயே பச்சமுத்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் காவல்துறை விசாரணையைத் தொடங்கினர்.

இந்த நிலையில், மதன் மாயமானது, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சீட் கொடுப்பதாகக் கூறி 72 கோடி ரூபாய் வரை மோசடி. செய்ததன் அடிப்படையில் பச்சமுத்துவை நம்பிக்கை மோசடி (406), மோசடி (420), 34 ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பச்சமுத்துவை இன்று திடீரென கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே இந்திய ஜனநாயகக் கட்சி மாநில மருத்துவர் அணிச் செயலாளர் பார்க்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாபு, மதனின் நண்பர் விஜயபாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க