• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடிகளில் புரளும் கடல் உயிரின கடத்தல் தொழில்.

June 14, 2016 Venki satheesh

தற்போது உலகம் முழுவதும் உள்ள மாபியா கும்பல் ஆயுதம், போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றுடன் மற்றும் ஒரு தொழிலையும் சேர்த்துச் செய்வது வாடிக்கையாக உள்ளது.

அது கடல் உயிரினங்களின் கடத்தல் தான். சமீப காலமாக உலகின் சீதோசன நிலை மாற்றத்தாலும், அதிகரித்து வரும் தீய பழக்க வழக்கங்களாலும் மனிதர்களின் இனவிருத்தி மற்றும் ஆண்மைத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது.

அயல் நாடுகளில் இதை ஒரு பெரிய குறையாகவே எடுத்துக்கொண்டு அதற்குண்டான தீர்வை பல ஆண்டுகளாகத் தேடி வருகின்றனர். மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் மீண்டும் இழந்த திறனை பெற முடியும் என நம்பி பல்வேறு மருந்து மாத்திரைகளை முயற்சி செய்தனர்.

ஆனால் அதனால் எந்தப் பலன் இருந்தாலும் கூடவே உபத்திரவங்களும் இருந்தது. உச்சபட்சமாக உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே மாற்று வழியைத் தேடிவந்த அயல் நாட்டவரை ஈர்க்கும் வண்ணம் ஒரு கும்பல் இல்லாத பொல்லாத கதைகளை அள்ளிவிட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்களை செய்துவருகிறது. அதில் குறிப்பிடத்தக்கது கடல் உயிரினங்களில் மாமிசத்தை உண்டால்
ஆண்மை பலம் அதிகரிக்கும் எனச் சீன ரகசியம் சொல்கிறது எனக் கதை கட்டி விட்டுள்ளது தான்.

அதிலும் குறிப்பாக ஆமைகள் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளும் என்பதால் நட்சத்திர ஆமைகள் ஆண்மையை அதிகரிக்கச் சிறந்தது எனப் பரப்பி விட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு நாடுகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் நட்சத்திர ஆமையின் மாமிசம் விற்கப்பட்டு வருகிறது. இதோடு, நட்சத்திர சங்குகளில் உள்ள நத்தைகளும் மிகச் சக்திவாய்ந்தவை எனப் பரப்பப்பட்டு அவற்றையும் விட்டு வைக்கவில்லை.

இதையடுத்து பல்வேறு நாடுகளில் இந்தவகை அறியக் கடல் விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனாலும் மாபியாக்கள் இதைச் சட்ட விரோதமாகக் கடத்தி அதிக பணம் சம்பாதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு முறை கடத்தல் நட்சத்திர ஆமைகள் பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் நட்சத்திர சங்குகள் ஆயிரக்கணக்கானவை பிடிக்கப்பட்டுள்ளன. இவை அலங்காரப் பொருளாகவும் உபயோகிக்கப் படுவதால் இரு மடங்கு லாபம் கிடைக்கிறது. இதையடுத்து உயிரைப்
பணயம் வைத்து இந்தக் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். உண்மையில் அந்த அறிய
விலங்குகளை உண்டால் சக்தி பெருகுகிறதோ இல்லையோ உலகில் உள்ள அந்த அழகிய சிறு உயிரினகள் அழிந்து வருவது மட்டும் நிஜம்.

மேலும் படிக்க