• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

September 26, 2016 தண்டோரா குழு

எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, ‘ஸ்கேட் சாட் 1’ செயற்கை கோளுடன் இன்று காலை, 9:12 மணிக்கு, ‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட் , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.இதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான, 48.30 மணி நேர, ‘கவுன்ட்-டவுண்’ நேற்று முன்தினம், காலை, 8:42 மணிக்கு துவங்கியது.

வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும் என்றும் வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, ‘ஸ்கேட் சாட் 1’ செயற்கைகோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டு செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரியா நாட்டு செயற்கைக்கோள் 3, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோள்,இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்களும் இதில் அடங்கியுள்ளன.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.இந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க