December 7, 2017 தண்டோரா குழு
உலகளவில் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ள பாரம்பரிய தளங்கள் பட்டியலில் இந்தியாவின் ‘தாஜ் மஹால்’ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்காவின் “Trip Advisor” சுற்றுலா நிறுவனம்,உலகின் சிறந்த பாரம்பரிய தளங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் கம்போடியா நாட்டிலுள்ள ‘அங்கோர் வாட்’ கோயில் முதல் இடத்தையும், “தாஜ் மஹால்” இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும், இந்த பட்டியலில் ‘சீனாவின் பெருஞ்சுவர்’,தென் அமெரிக்காவின் “மச்சு பிச்சு”,பிரேசில் நாட்டின் இகுவாசு தேசிய பூங்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.