January 4, 2018 தண்டோரா குழு
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மகாலை சுற்றிபார்க்க நாள் ஒன்றுக்கு 40,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவின் காதல் சின்னமான தாஜ்மகால் விளங்குகிறது. முகலாய மன்னர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக காட்டினார். தனது மகன் ஒளரங்கசீப், அவரை சிறையில் அடைத்தபோது, தாஜ்மகாலை பார்த்துக்கொண்டே இறுதி நாட்களை கழித்தார் என்று சரித்திரம் கூறுகிறது. இதை சுற்றிப்பார்க்க இந்தியா மக்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாட்டின் மக்கள், இதன் அழகை கண்டு ரசிக்க இந்தியா வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில்,தாஜ்மகாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சுமார் 60,000 முதல் 70,000 வரை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, தாஜ்மகாலின் நுழைவாயிலில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அங்கு வரும் சுற்றுலா பயணிகள் நாளுக்கு சுமார் 40.000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் சுமார் 3 மணிநேரம் மட்டுமே, அங்கு இருக்க முடியும். தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஆன்லைன் மூலமாகவோ அல்லது, ஆப்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது, சுமார் 40,000 டிக்கெடுடன் நிறுத்தப்படும் என்று புதுதில்லியின் கலாச்சார அமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.