December 3, 2016 புதிய செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் காந்தஹார் மாவட்டத்தில் உள்ள நெஸ் சோதனைச் சாவடியில் தலிபான் கிளர்ச்சியார்களுக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து காந்தஹார் போலீசார் தெரிவித்ததாவது:
பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர், பலர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்டன. அதனால் கோபம் அடைந்த அவர்கள் பழி வாங்க இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில் 5 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 23 பேரைக் கொன்றுவி்டடனர்.
இந்த தாக்குதலின் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்த தாலிபான்கள், தங்களை எதிர்க்கும் மக்களைக் கொன்றனர்.
கொலை செய்யப்பட்ட 23 பேரில் 6 பேர் காவல்துறையினரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால், இத்தகவலை தலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூசோப் அஹ்மதி மறுத்துவிட்டார்.
இவ்வாறு காந்தஹார் போலீசார் கூறினர்.