• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பும் சசிகலா புஷ்பா

August 1, 2016 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டம், முதலூரை அடுத்த அடையல் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா புஷ்பா. மிககுறுகிய காலத்தில் அதிமுகவில் அசுர வளர்ச்சி கண்ட இவர் தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயளாலர்,தூத்துக்குடி நகர மேயர்,மாநிலங்களவை உறுப்பினர் எனக் கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாகவே இருந்து வந்தது.

தூத்துக்குடி மேயராக பதவி வகித்த போதே மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி ஆனார்,மேலும், அதிமுகவின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்.

இதையெடுத்து, திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படங்கள் சமூக வளைதலத்தில் வெளியானது. தனது ஆண் நண்பருடன் மதுபோதையில் வாட்ஸ்ஆப் உரையாடியது, விமான நிலையத்தில் திருச்சி சிவாவைக் கன்னத்தில் அறைந்தது என வரிசையாகச் சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் தனது செல்வாக்கை குறைத்துக்கொண்டே வந்தார் சசிகலா.

இந்நிலையில் கட்சியின் நற்பெயருக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கப்படுவதாகக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

ஆனால், தான் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனவும், தான் மிரட்டப்படுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு பாதுகாப்பு தரும்படி சசிகலா புஷ்பா கண்ணீருடன் மக்களவையில் பேசினார்.

பின்னர் இது குறித்து டெல்லி செய்தியாளர்களுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில்,சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன்.வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர்.

அவர்களிடம் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை எனவும் என்னுடைய வீட்டுக்குச் செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை எனவும் கூறினார். மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் அளிக்கிறது. என்றும் இப்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார். அதைபோல், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாத காலமாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். நான் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன். எனக்காக காங்கிரஸ், திமுக, பாஜகவினர் குரல் கொடுத்தார்கள்.

அவர்களுக்கு நன்றி என சசிகலா புஷ்பா கூறினார்.மேலும் 2020ஆம் ஆண்டு வரை தனக்கு பதவிக்காலம் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், நெல்லை அருகே உள்ள சசிகலா புஷ்பா வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையெடுத்து, தற்போது, சசிகலா விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க