• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சர்வேதச அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான மைதானம் அமைக்கப்படும் – எஸ்.பி.வேலுமணி

November 20, 2017 தண்டோரா குழு

கோவையில் சர்வேதச அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான மைதானம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை வ.ஊ சி மைதானத்தில் ரூ48 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டுள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும், விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய விளையாட்டு மேம்பாட்டு நலன் துறை அமைச்சர்,

விளையாட்டு துறையில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கிராமப்புறங்களில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதோடு மட்டுமல்லாது அவரின் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது மாதிரியான மைதானம் கோவையில் தான் முதல் முறையாக அமைக்கப்பட்டு உள்ளது. என்று கூறினார்.

இவ்விழாவில் பேசிய, அமைச்சர் எஸ்பி வேலுமணி,

கோவை நேரு ஸ்டடியம் ரூ4 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்த ஒப்பந்தம் இன்று போடுவதாக தெரிவித்தார்.

காந்தி பார்க் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் , ஆர்.எஸ். புரத்தில் ஹாக்கி மைதானம்,
அமைக்கப்பட்டு வருவதாகவும், மேலும் நிதி ஒதுக்கப்ப ட்டு நிலுவையில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து தனது நீண்ட நாள் கனவும் ,கோரிக்கையுமான சர்வேதச அளவிலான கிரிக்கெட் மைதானம் கோவையில் விரைவில் அமைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,விரைவில் கோவையில் இன்னொரு ஸ்டேடியம் அமையும் எனவும் உறுதி அளித்தார்.

மேலும் படிக்க