July 28, 2016 தண்டோரா குழு
சட்ட சபையில் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலைத்து பேசிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது. குற்றச்செயல்கள் குறைந்து வருகிறது.
காவல் துறையை சுதந்திரமாகச் செயல்பட விட்டுள்ளதால் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் மொத்த குற்ற வழக்குகள் எண்ணிக்கை 23,068. அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு 2011ம் ஆண்டு 22,809 ஆகக் குறைந்தது. 2012ம் ஆண்டு 20,391 ஆகவும், 2013ல் 21,721 ஆனது.
2014ல் 21,110 ஆகக் குறைந்தது. கடந்த ஆண்டு 19,931 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு இதுவரை 9,930 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகை சமூக சூழ்நிலை போன்றவற்றால் குற்றம் நடப்பது தவிர்க்க முடியாது.
ஆனால் தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் குற்றங்களை குறைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையில் குற்றவாளி விரைவில் கண்டு பிடிக்கப்பட்டார்.
அது போல பெரியமேட்டில் நடந்த கொலை, கோடம்பாக்கத்தில் நடந்த வக்கீல் கொலையிலும் காவல்துறை திறமையாக துப்பு துலக்கி குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது எனத் தெரிவித்