November 3, 2016 தண்டோரா குழு
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுக்கடைகளை மூட ஆயத் தீர்வைத் துறை உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் 3 தொகுதிகளிலும்,புதுச்சேரியில் 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுசேரியில் தற்போது முதல்வராக உள்ள வி. நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகர் போட்டியிடுகிறார். அதிமுகவிற்கு என்.ஆர். காங்கிராஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் ஓட்டுக்கள் நவம்பர் 22 ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு நவம்பர் 17 ம் தேதி மாலை முதல் நவம்பர் 19 ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதே போன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு நவம்பர் 21 ம் தேதி மாலை முதல் நவம்பர் 22 ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.