November 23, 2016 தண்டோரா குழு
63 தொழில் அதிபரின் கடன் தள்ளுபடி என்பது தவறான தகவல். அவர்களின் வங்கி கணக்குகளை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு மாற்றியுள்ளோம் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா புதன்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பழைய 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து இதுவரை 1லட்சத்து 20 ஆயிரம் கோடி பணம் பாரத ஸ்டேட் வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது.
டெபாசிட் செய்துள்ள பணத்தில் 10 முதல் 15 சதவீதம் மக்கள் எடுத்திருக்கலாம்.
63 தொழில் அதிபரின் கடன் தள்ளுபடி என்பது தவறான தகவல். அவர்களின் வங்கி கணக்குகளை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு மாற்றியுள்ளோம். மூன்றில் ஒரு பங்கு பணம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்துதான் மக்களுக்கு பணம் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் அதிகளவில் புழக்கத்தில் விட்டதால் ஓரளவு பிரச்சனையை சமாளிக்க முடிந்தது அதே சமயம் புதிய 500 ரூபாய் கிடைக்காததால் தான் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைந்தது.
தற்பொது புதிய 500 ரூபாய் ரிசர்வ் வங்கி வினியோகம் செய்ய தொடங்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகிவிடும். பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன். இதற்கு வங்கிகள் முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது ,நாளுக்கு நாள் மக்கள் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதால் நிலைமை விரைவில் சீரடையும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.