November 15, 2017 தண்டோரா குழு
பாகிஸ்தானில் கோழியை பாலியல் வன்முறை செய்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப்பை சேர்ந்தவர் அன்சாப் அலி. அவர்தனது அண்டை வீட்டில் வசிக்கும் 14 வயது அன்சார் ஹுசைன் கடந்த நவ 11, தனது கோழியை கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அதை கொலை செய்துள்ளான் என்று ஜல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அன்சார் அலியின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், அது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அன்சார் ஹுசைனை விசாரித்தபோது, அந்த கோழியை பாலியல் வன்முறை செய்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான்.மேலும்,சிறுவன் கோழிக்கு பாலியல் வன்முறை செய்ததை நஸ்ருல்லா மற்றும் துபைல் ஆகியோர் பார்த்துள்ளனர்.இதையடுத்து சிறுவன் ஹூசைன் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனர்.