March 1, 2017 தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு வெவேறு தாக்குதல்கள் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது.
“காபூல் நகரில் உள்ள காவல்துறை, ராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை அலுவலகங்களைக் குறிவைத்து தாக்கினோம்” என்று தலிபான் தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
“காபூல் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் புலனாய்வுத் துறையைக் குறிவைத்து ஒரு தாக்குதல் நடந்தது” என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
காபூல் நகரத்தின் இரண்டு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்களை உறுதி செய்துள்ளனர்.
காவல்துறை அதிகாரி கூறுகையில், “மேற்கு காபூல் நகரில் நடந்த குண்டு வெடிப்பிற்குப் பிறகு, பாதுகாப்புப் படைக்கும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ராணுவப் பயிற்சிப் பள்ளி அருகே உள்ள மாவட்ட காவல் தலைமையகத்திற்கு அருகே சண்டை நடந்துள்ளது” என்று கூறினார். ஊடகங்களிடம் பேச தனக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை அந்த அதிகாரி கூறினார்.
இது குறித்து அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவோ சண்டையில் நேர்ந்த உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரத்தையோ வெளியிடவில்லை. காபூல் நகரத்தின் மறுபக்கம் வரை இந்த தாக்குதல் சத்தம் கேட்டது.
பிப்ரவரி மாதம் காபூல் உச்ச நீதிமன்றதிற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 2௦ பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.