• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாய்லாந்தில் மிதக்கும் தீபத் திருவிழா விமானச் சேவைகள் ரத்து

November 12, 2016 தண்டோரா குழு

தாய்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிதக்கும் தீபத் திருவிழாவையொட்டி சில விமானச் சேவைகளை ரத்து செய்து, சிலவற்றின் நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலத்தின் முடிவில் தோன்றும் பவுர்ணமி நாளன்று இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் விதமாக வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட தீபங்களை வானில் பறக்க விடுவது அந்நாட்டின் வழக்கம்.

அந்த வகையில், கடந்த ஆண்டு வானில் மிதந்து சென்ற ஒரு தீபமானது, அவ்வழியாக பறந்து சென்ற ஒரு விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டதால் பெரும் விபத்து ஏற்ப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் 16-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் தீபத் திருவிழாவையொட்டி சில விமானச் சேவையை ரத்து செய்து, சிலவற்றின் நேரத்தை மாற்றியமைக்கவும் வடக்கு தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் சர்வதேச விமான நிலையம் தீர்மானித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் பழம்பெரும் மன்னர் பூமிபோலின் மறைவுக்கு ஓராண்டு துக்கம் கடைபிடிக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டின் அந்த அழகு நிறைந்த திருவிழா அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற விபத்துகள் ஏதும் நேராமல் தடுப்பதற்காக பாங்காக் நகரில் இருந்து சியாங் மாய் நகருக்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தாய் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க