September 22, 2016 தண்டோரா குழு
கடந்த 1993ம் ஆண்டு,பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எமிலீ லேரி(43), தொழில் ரீதியாக அவர் ஒரு மின்னியல் வல்லுநராக இருந்தார். அவர் தனது சிட்ரோன் 2CV நான்கு சக்கர வாகனத்தை கொண்டு துணிச்சலான செயலை செய்ய தீர்மானித்தார்.
எகிப்து நாட்டின் டான்ட்டா நகரில் இருந்து மொரோகோ பாலைவனத்தை தனது வாகனத்தில் மூலம் கடக்க அவர் திட்டமிட்டார்.ஆனால்,அவருடைய பிரயாணம் அவர் வகுத்த திட்டதிற்கு முற்றிலும் மாறாக இருந்தது. எதிர்பாராத விதமாக அவருடைய வாகனம் நடுவழியிலேயே சிக்கி உடைந்துபோனது. அதனால் அவர் அங்கு இருந்து வெளியே வரமுடியாமல் அங்கேயே மாட்டிக் கொண்டார்.
அங்கு அவருக்கு உதவ யாருமில்லை.அருகில் உள்ள நகரங்களுக்கு தொடர்புக்கொள்ளவும் முடிய இல்லை.அதிக வெப்பம் நிறைந்த அந்த பாலைவனத்தில் இருந்து எப்படியும் வெளியேற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு உடைந்து போன அவருடைய வாகன பகுதிகளைக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தை வெறும் மூன்றே நாளில் செய்து முடித்தார்.
மேலும், அவர் அந்த வனாந்தரத்தை விட்டு வெளியேர எப்படியும் பத்து நாட்கள் ஆகும் என்றும், தன்னிடம் இருந்த அரை லிட்டர் தண்ணீரும் உணவுப்பொருட்களையும் பயன்படுத்தி ” பாலைவன ஒட்டகம் ” என்ற பெயருடைய அந்த இருசக்கர வாகனத்தை உபயோகப்படுத்தி மொராக்கோ பாலைவனத்தை விட்டு வெற்றிகரமாக வெளியேறினார்.