December 11, 2017 தண்டோரா குழு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் 63,500 வரை நிவாரணம்.33 சதவீதம் ரப்பர் மரம் பாதிக்கப்பட்டு இருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படும்.
மேலும்,ரப்பர் தோட்டங்களில் தேனி வளர்புக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 தேனி பெட்டிகள் வழங்கப்படும்.புதிததாக ரப்பர் மரம் பயிரிடவும் ஊடு பயிர் செய்யவும் ஏக்கருக்கு ரூ.20,000 மானியம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.