October 14, 2016 தண்டோரா குழு
தீபாவளியை முன்னிட்டு 21,289 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் அக்பேடார் 29-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.பொது மக்கள் பலரும் தீபாவளியை கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.இதன் காரணமாக பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து வரும் அக்டோபர் 26,27 மற்றும் 28 ம் தேதிகளில் 10,064 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 26, 27 மற்றும் 28 ம் தேதிகளில் 11, 225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
அதே போல் புதுவை கடலூர், சிதம்பரம், செல்லும் பேருந்துகள் மாநில தேர்தல் ஆணையம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இதர ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டாலும் கூட ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடதக்கது. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.