November 21, 2017 தண்டோரா குழு
முத்தலாக் நடைமுறையை வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுக்குக் கொண்டு வர முடிவு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இஸ்லாமியர்கள் முறைப்படி ஒரே நேரத்தில் 3 முறை தலாக் விவகாரத்தில் வெறும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில், ஒரே நேரத்தில் 3 முறை தலாக் கூறும் முத்தலாக் முறையை தடுக்கும் புதியசட்டம் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய சட்டத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி சட்டம் கொண்டு வர மத்திய அரசு உறுதி அளித்தது.
மேலும்,நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.வழக்கமாக குளிர் கால கூட்டத் தொடர் நவம்பர் 3ம் வாரம் துவங்கி டிசம்பர் இறுதி வரை நடக்கும். எனினும், இந்த முறை அதை 10 நாட்களாக சுருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.