December 16, 2016 timesofindia
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த மாதம் பதவி ஏற்கும் டொனல்ட் டிரம்ப், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.டி. துறை அதிகாரிகளை புதன்கிழமை(டிசம்பர் 14) சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹட்டன் பகுதியில் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவரில் அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளை சந்திக்க புதன்கிழமை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்டெல், அமேசான், பேஸ்புக், ஆப்பிள், கூகுள், ஐ.பி.எம்., மைக்ரோசாப்ட், ஓரகில், சிஸ்கோ, டெஸ்லா ஆகிய நிறுவங்கள் இந்த கூடத்தில் பங்கேற்றனர். இந்த நிறுவங்களுடன், இந்திய வம்சவாளியான மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ள இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
அக்கூடத்தில் டொனல்ட் டிரம்ப் பேசியதாவது:
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஐ.டி. நிறுவங்கள் முன்வர வேண்டும். அமெரிக்க ஐ.டி. நிறுவங்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண தயாராக உள்ளேன். மற்ற நாடுகள், நமது நாட்டின் முன்னேற்றத்தில் தடையாக இருக்காத அளவிற்கு நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். சர்வதேச சூழலுக்கு ஏற்ற வகையில் வரி குறைப்பு செய்யும் கோரிக்கை வந்துள்ளது. அது குறித்து பரிசீலிப்போம். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னுடைய அலுவலக அதிகாரிகளையோ அல்லது என்னையா நீங்கள் தைரியமாக தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.