• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

January 8, 2018 தண்டோரா குழு

கோவையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்பள பிரச்சனை தொடர்பாக ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று(ஜன 8) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தினக்கூலி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மூலம் 46 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து தமிழக அரசு உத்தரவின் அடிப்படையில் தகுதியுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில்,கோவையில் இதுவரை 145 ஓட்டுநர்களும் 66 நடத்துநர்களும் தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் முழுவதிலுமுள்ள 19 பணிமனைகளிலிருந்து தினசரி சுமார் 1150 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் சூழலில் இன்று 508 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும்,
தகுதியுள்ள தனியார் ஓட்டுநர்களை கொண்டு அதிகளவிலான பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறிய போக்குவரத்து கழக நிர்வாகம் மாலைக்குள் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,அரசின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் 5196,நடத்துநர்கள் 4712,தொழில்நுட்ப பணியாளர்கள் 1823 மற்றும் நிர்வாக பணியாளர்கள் 88 பேர் என கோவை கோட்டத்தை உள்ளடக்கிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 11,819 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கி கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 14 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க இருப்பதாக எச்சரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கலைந்து சென்றனர்.இறுதியில் தொழிற்சங்க நிர்வாகிகள் 27 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க