தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
டிரம்ஸ் வாசிப்பில் உலக சாதனை படைத்த ஷிருஷ்டி
August 26, 2016தண்டோரா குழு
சாதிக்க நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்தச் சாதனையை சிலர் மட்டுமே வெற்றி காண்கிறார்கள். அந்த வரிசையில் தான் கற்றக் கலையை கொண்டு எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி அசத்தியிருக்கிறார் ஷிருஷ்டி. உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது ஷிருஷ்டி படிதார் என்ற பெண் சமீபத்தில் தொடர்ச்சியாக டிரம்ஸ் இசைக்கருவியை வாசித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள பல்டா என்ற சிறிய கிராமம் தான் ஷிருஷ்டியின் சொந்த ஊர். இவருக்கு டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். அவர் வாழ்ந்த கிராமத்தில் அதற்கான வசதி இல்லாததால் இந்தூர் நகரில் உள்ள பப்லூ சர்மாவிடம் டிரம்ஸ் கற்க அவரிடம் சேர்ந்தார். ஆனால் தன்னுடைய அதிக ஆர்வத்தால் அதைச் சீக்கிரமாகவே கற்றுக்கொண்டார்.
தனக்கு நன்றாக டிரம்ஸ் வாசிக்கத் தெரியும் என்று எத்தனைப் பேருக்கு சொல்லமுடியும். அதனால் எல்லோருக்கும் தன் டிரம்ஸ் வாசிக்கும் சத்தத்தை கேட்க வேண்டும் என்று எண்ணிய ஷிருஷ்டி, தானாகவே முன்வந்து இந்தூரில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தொடர்ச்சியாக 31 மணி நேரம் டிரம்ஸ் வாசித்து, உள்ளூர் மட்டும் அல்ல உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12.30 மணிக்கு டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்த ஷிருஷ்டி, மறுநாள் அதாவது செவ்வாய் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக வாசித்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே அதிக நேரம் டிரம்ஸ் வாசித்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசித்ததே உலக சாதனையாக இருந்துள்ளது. தற்போது ஷிருஷ்டி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.