January 12, 2018 தண்டோரா குழு
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றது.அதன்படி தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,அண்ணல் அம்பேத்கர் விருது 2017 – டாக்டர் சகோ.ஜார்ஜ்
பேரறிஞர் அண்ணா விருது 2017 – அ.சுப்பிரமணியன்
பெருந்தலைவர் காமராசர் விருது 2017 – தா.ரா.தினகரன்
மகாகவி பாரதியார் விருது 2017 – முனைவர் க.பாலசுப்ரமணியன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது 2017 – கே.ஜீவபாரதி
தமிழ்தென்றல் திரு.வி.க விருது 2017 – எழுத்தாளர் வை.பாலகுமாரன்
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது 2017 – முனைவர் ப.மருதநாயகம்
தந்தை பெரியார் விருது 2018 – பா.வளர்மதி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது அறிவிக்கபட்டுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வளர்மதிக்கு பெரியார் விருதா ? இதைவிட பெரியாரை அவமானப்படுத்த முடியாது. RIP பெரியார், சத்திய சோதனை என ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.