• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள மலை கிராம மக்களுக்கு விஜய் தான் எல்லாமே: துணை கலெக்டரின் வியப்பு பதிவு

August 10, 2016 தண்டோரா குழு

தமிழ்நாட்டுக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்களைக் கொண்ட மாநிலம் கேரளா. அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக திரையரங்குகளில் பல விஜய் படங்கள் வெளியாகி இருக்கிறது.

கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டராகப் பணிபுரிந்து வருபவர் உமேஷ் கேசவன். அவர் சமீபத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

அங்குச் சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை.

அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் விஜய் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த அட்டப்பாடியில் தான் சமீபகாலமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் புகைப்படத்தையும் மாவோயிஸ்ட்கள் என்று வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க