January 25, 2018 தண்டோரா குழு
விஜயேந்திரருக்கு தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க மனமும் இல்லை, வலிமையும் இல்லை என திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் விமர்சித்துள்ளார்.
கோவையில் நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
“விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும் போது வலிமை இருந்திருக்கிறது, தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க மனமும் இல்லை, வலிமையும் இல்லை என விமர்சித்தார். மேலும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன சிறிது காலம் தான் இருக்கும் அதற்குள் சுருட்டி விட்டு போகலாம் என ஆளுங்கட்சியினர் நினைப்பதாக தெரிவித்தார்.
பாஜக நினைத்த நேரத்தில் நினைத்தையெல்லாம் பேசுவார்கள் என கூறிய அவர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது குறித்து பேசியது தமக்கு ஒன்றும் தெரியாது என கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசியதற்கு சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக தெரிகிறது போல என தெரிவித்தார்.ரஜினி,கமல் அரசியலுக்கு வந்த பின் மக்களிடம் கிடைக்கின்ற மரியாதையை வைத்து தான் கருத்து சொல்ல முடியும்” என தெரிவித்தார்.