• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரான்ஸ் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன் – தமிழச்சி

September 30, 2016 தண்டோரா குழு

முதல்வர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தமிழச்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இதற்காக பிரான்ஸ் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன் என தமிழச்சி கூறியுள்ளார்.

முதலமைச்சர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் நேற்று முகநூலில் தமிழச்சி என்ற பெண், முதல்வர் இறந்துவிட்டதாக அவதூறு செய்தி வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, முதல்வர் குறித்து தவறாக அவதூறு பரப்பியதால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழச்சி மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி,

சென்னை போலீஸ் என் மீது வழக்கு பதிவு செய்ததை வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன் என முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க