January 5, 2018 தண்டோரா குழு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் வேலை நேரத்தில் தங்களது செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி
ஜான் கெல்லி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவராக பதவி ஏற்ற நாளில் இருந்து வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாக பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார்.இதனை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், ரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் செல்போன்கள் வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.