• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா ஏன்? ஸ்டாலின் விளக்கம்

August 18, 2016 தண்டோரா குழு

சபாநாயகரின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.அப்போது திமுகவினர் தாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் செல்லவே வந்திருப்பதாகக் கூறினர்.ஆனாலும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வாயில் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் இந்தத் தர்ணா நடைபெற்றது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான என்னை எனது அறைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.சட்டப்பேரவைக்குள் செல்லத் தான் அனுமதி இல்லை எனது அறைக்குச் செல்ல அனுமதி உண்டு என்று கூறியும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.எனவே, சபாநாயகரின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.

மேலும், திமுக ஆக்கப்பூர்வமாகவே சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகிறது அவையில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும்,அவையை புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்ததில்லை. எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஓரிரண்டு சமயங்களில் மட்டும் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பல்வேறு மாநில அரசுகளும் நேரலையாக ஒளிபரப்புகின்றன.அதே போல் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.ஆனாலும்,அது எடுபடவில்லை.வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று ஏதாவது காரணம் சொல்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினால் மட்டுமே உண்மை நிலைமை தெரியவரும் என்று தெரிவித்தார்.

ஸ்டாலினைத் தொடர்ந்து பேசிய துணைத் தலைவர் துரைமுருகன், தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்குச் சட்டம் தெரியவில்லை.எந்தப் பகுதி சபாநாயகர் அதிகாரத்துக்குட்பட்டது என்று அவருக்குத் தெரியவில்லை என்றும் பேரவை மட்டுமே அவர் அதிகாரத்துக்குள் வரும் ஒட்டுமொத்த கோட்டையும் அல்ல.

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் செல்ல விட மறுத்தது சர்வதிகார போக்கு என்றும் சட்டமன்ற உறுப்பினரைக் கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக உரிமை மீறல் பிரச்சினையை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க