September 16, 2016 தண்டோரா குழு
திருமணதிற்கு பிறகு வளர்ப்பு நாயை அவர்களுடன் வைத்துக்கொள்ள விருப்பம் இல்லை என்று மணமகன் கூறியதற்காக மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஆர்த்தி நகரை சேர்ந்தவர் கர்ணிஷா வாலியா, இவருக்கும், பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின் இருவரும் தினமும் இணையதளமான பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது கர்ணிஷா வாலியா தான் ஆசையாக வளர்க்கும் நாய் பற்றி மணமகனிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
அவருடைய பேச்சு மணமகனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. உடனே அவர், நாய்கள் என்றால் எனக்கு பிடிக்கும் ஆனால் நீ அதை பற்றியே பேசி கொண்டு இருப்பதால், உன்னை நினைத்தாலே நாய் ஞாபகம் தான் வருகிறது என்று பேஸ்புக்கில் பதில் அனுப்பினார். இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு முன்பே தன் மீது ஆதிக்கம் செய்கிறீர்கள் என்றும்,தான் ஆசையாக வளர்க்கும் நாயை கேவலப்படுத்துவதை தன்னால் சகித்து கொள்ள முடியாது என்றும் கர்ணிஷா கோபமாக பதில் அனுப்பியுள்ளார். மேலும், திருமணத்துக்கு பிறகும் வளர்ப்பு நாயை தன்னுடன் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதற்கு மணமகன், என் அம்மாவுக்கு நாய் என்றால் பிடிக்காது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணிஷா, உன் அம்மாவுக்கு நாய்கள் பிடிக்கவில்லை என்றால் எனக்கு என்ன? உன்னுடன் திருமணமே வேண்டாம். அதை நிறுத்திவிடலாம் என்று கூறிவிட்டார். இதனால் அவர்களுடைய திருமணமும் நிறுத்தப்பட்டுள்ளது.