• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வரதட்சணையாகப் புத்தகங்களை கேட்ட புதுமை பெண்

August 13, 2016 தண்டோரா குழு

இஸ்லாமியர்களின் வழக்கப்படி திருமணத்தின் போது மணப்பெண் கேட்கும் வரதட்சணையை மணமகன் வீட்டார் கொடுப்பது வழக்கம். இதன்படி பெரும்பாலானோர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களையே கேட்டு வழக்கமாக இருந்தது.

இந்த விதியை மாற்றிச் சற்று வித்தியாசமாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து புத்தகங்களை வரதட்சணையாக் கேட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சாலா நெச்சியில். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்ற இவருக்கும் அனீஸ் நடோடி என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது தனக்கு வரதட்சணையாக, இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த 50 புத்தகங்களைத் தரவேண்டும் எனச் சாலா கேட்டுள்ளார். இது சற்று புதுமையாக இருந்தாலும் மணமகன் அனீசும், சாலா கேட்ட புத்தகங்களை பெங்களூரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று தேடித் தேடி வாங்கி வந்து அவருக்கு வரதட்சணையாகக் கொடுத்துள்ளார்.

இது குறித்து சாலா கூறும்போது, இன்றைய சூழ்நிலையில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுக்கு தான் மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அது எதுவும் இல்லாமல் தங்களது திருமணம் நடைபெற்றதை வெளி உலகுக்குத் தெரிவிப்பதற்காகவே புத்தகங்களை வரதட்சணையாக கேட்டுப் பெற்றதாக சாலா தெரிவித்தார்.

மேலும், தற்போது பெண்கள் கேட்கும் வரதட்சணை அவர்கள் சுயமாக கேட்பதாக இல்லாமல் அவர்களது வீட்டார்கள் கேட்டு பெறுவதாக இருந்து வருகிறது. அதனைத் தளர்த்தி பெண்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இது போன்று வரதட்சணை கேட்டதாக கூறிய அவர் நான் கேட்ட புத்தகங்கள் கிடைப்பதற்கு எனது கணவர் சற்று சிரமப்பட்டிருப்பார்.

இருந்தாலும், மகர் தேடி கொடுத்தால் தான் அதில் ஒரு பந்தம் இருக்கும் என்றார். சாலா கேட்ட வரதட்சணை குறித்து அவரது கணவர் அனீஸ் நடோடி கூறும் போது, மகர் என்பது பெண்களுக்கான உரிமை என்றும், ஆண்களுக்கான பெருந்தன்மை இல்லை என்றார். மேலும், சாலா தாங்கள் மதத்திற்கு எதிராக எந்தச் செயலையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சாலா இஸ்லாமிய பெண்ணிய இலக்கியம், பெண்ணிய இலக்கியம், அரசியல், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க