August 24, 2016 தண்டோரா குழு
உலகின் பத்து பணக்கார நாடுகளின் பட்டியலை நியூ வோல்ட் வெல்த் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 7 வது இடத்தைப் பிடித்துள்ளது.
நியூ வோல்ட் வெல்த் என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின் படி, உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில், 48,900 பில்லியன் டாலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
சீனா 17,400 பில்லியன் டாலர்களுடன் 2வது இடத்தையும், 15,100 பில்லியன் டாலர்களுடன் ஜப்பான் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
அதே போல் இங்கிலாந்து 9,200 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும்,9,100 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி 5வது இடத்திலும் உள்ளது.மேலும், பிரான்ஸ் 6,600 பில்லியன் டாலர்களுடன் 6வது இடத்தையும், 5,600 பில்லியன் டாலர்களுடன் இந்தியா 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் கனடா 8-வது இடத்திலும்,ஆஸ்திரேலியா,இத்தாலி முறையே 9-வது மற்றும் 10 வது இடத்திலும் உள்ளது.
இந்த ஆய்வில் தனிநபர்களின் சொத்து மதிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் இதில் அரசு ஒதுக்கும் நிதி எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.