January 11, 2018 தண்டோரா குழு
கோவையில் மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த கணினி பொறியாளர் பாலமுருகன்(27).இவருக்கு மேட்ரிமோனியல் மூலம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.இதற்கிடையில் அந்த பெண் திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறிய அப்பெண் தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ரூ.45 லட்சத்தை அந்த பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பணம் பெற்றவுடன் தொடர்பிலிருந்து விலகியவுடன், தான் ஏமாற்றப்பட்டது அறிந்த பாலமுருகன் கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி (21) மற்றும் தாய் சித்ரா(45), தந்தை என கூறப்படும் பிரசன்ன வெங்கடேசன்((38) ஆகிய மூவரை கைது செய்தனர்.
இந்த விசாரணையில் மேட்ரிமோனியல் மூலம் தகுதி, பொருளாதார சூழ்நிலை ஆகியவை அறிந்து அதற்கேற்ப தங்களின் பக்கத்தில் தகவல்களை மாற்றி ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்தது தெரியவந்தது.மேலும்,குடும்பமாக நன்முறையில் சுமார் 3 மாதங்கள் பழகிய பின் ஏதாவது புற்றுநோய், மூளைக்கட்டி ஆகிய பெரிய அளவிலான உடல்நிலையை காரணம் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, நாமக்கல், நாகப்பட்டினம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இளம்பெண் உட்பட இந்த கும்பலின் மீது இதேப்போல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.