July 19, 2016 தண்டோரா குழு
இளைஞர் ஒருவர் போகிமோன் கேமை விளையாடுவதற்காகத் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டாம் க்யூரி (24), ’போகிமான் கோ’ என்ற கேமுக்கு அடிமையானதால் தனது வேலையையே ராஜினாமா செய்து உள்ளது மட்டும் அல்லாமல் அந்த விளையாட்டை முழுவதும் முடிக்காமல் வேறு எந்தச் செயலிலும் ஈடுபடப் போவதில்லை என்று சபதமேற்றுள்ளார். ஒவ்வொரு நாளும் கேமின் எந்த நிலையில் இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் அவரைப் பின்தொடர்ந்து அறிந்து வருகிறார்கள்.
இதைக் குறித்து டாம் க்யூரி கூறுகையில், இந்த விளையாட்டு சுவாரசியமாக இருப்பதால் இது அனைவருடைய உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும், போகிமான் கோ’ கேமை விளையாடும் போது, நிஜ உலகைப் பற்றியும் கவனமாக இருந்தால், எதிர்பாராத விபத்துக்களையும், பொது இடங்களில் தொந்தரவுகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம் என்று கூறினார்.
மேலும், தி போகிமான் கம்பெனி என்ற நிறுவனத்தால் ‘போகிமான் கோ’ என்ற பிரபல விளையாட்டு இந்த மாத தொடக்கத்தில் வெளிவந்தது. மேலும், உலகின் சில நாடுகளில் மட்டுமே இந்த கேம் வெளியிடப்பட்டது. இந்த போகிமானோ ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் ஒரு ரியாலிட்டி விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாகக் காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றைப் பிடிக்க முடியும். இப்படித்தான் இதை விளையாட வேண்டும்.
மேலும், இதை விளையாடும் அனைவரும் அந்தக் கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்வது போல் அமைந்துள்ளதால் உலகில் உள்ள அனைவரையும் தன்வசப்படுத்தியுள்ளது இந்த போகிமான் கோ விளையாட்டு.
அதற்காகத் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்வது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என நீங்கள் நினைப்பது சரிதான்.