கோவையில் இளம் பெண்கள் கிருஸ்துவ அமைப்பு (YWCA) 103 ஆண்டுகளாக
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு சேவைகளை வருகிறது.அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சகோதரத்துவத்தை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் YWCA சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் YWCA ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வெரைட்டிஹால் ரோடு காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மீனாம்பிகை, பந்தய சாலை சி2 காவல் நிலைய போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சுவாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில், கோவையை சேர்ந்த
40 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,YWCA தலைவர் நிர்மலா சேகர்,நிகழ்ச்சி தலைவர் டாக்டர் ஷேரன் சாம்சன் மற்றும் YWCA உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆய்வாளர் மீனாம்பிகை பேசுகையில்,
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மனதில் நினைத்தால் மட்டும் போது அதை நம் திறமையில் நிரூபிக்க வேண்டும்.ஆணுக்கும் பெண் நிகர் என்பதை விட அவர்களை விட நாம் ஒரு படி முன் நிற்க வேண்டும் என்று பேசினார்.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது