February 17, 2018 tamilsamayam.com
ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் ஒன்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு வில்லன் இல்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இத்தொடரை இந்திய கிரிக்கெடுக்கு எதிரான மக்கள் கருதுவதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஷ்வின் கூறுகையில்,
“ஐபிஎல்., கிரிக்கெட் தொடரை மக்கள் இந்திய கிரிக்கெட்டின் வில்லனாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது. ஐபிஎல். தொடரில் பங்கேற்கும் எல்லா வீரருக்கும் பல லட்சங்களில் பணம் கிடைக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு மனிதனுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு தன்னம்பிக்கை வேறு யாராலும் தரமுடியாது. பிசிசிஐ.,யின் மிகப்பெரிய முயற்சி தான் ஐபிஎல்., கிரிக்கெட் தொடர்”. என்றார்.