March 20, 2017
tamil.samayam.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் புஜாரா, சஹா ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸி வீரர்களை புலம்ப விட்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்களை குவித்தது.
451 ரன்களை குவித்திருந்த ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர் கேஎல் ராகுல் 67, முரளி விஜய் 82, ஜடேஜா 54 ரன்கள் என மூன்று வீரர்கள் அரை சதம் கடந்து அசத்தினர்.
மற்றொரு புறம் புஜாரா இரட்டை சதம் (202) விளாசியும், சஹா சதம் (117)விளாசியும் அசத்தி சிறப்பான இணையாக களத்தில் செயல்பட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 199 ரன்களை குவித்து, இந்தியாவை முன்னிலை பெறச் செய்தது.
இந்நிலையில் இன்றைய தின போட்டி முடிந்த பின் வெகுநேரம் விளையாடிதால் ஏற்பட்ட உடல் வலியை போக்க மசாஜில் ஈடுபட்டனர். களத்தில் மட்டுமல்லாமல், மசாஜ் செய்யும் இடத்திலும் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு செய்துகொண்டனர்.
இவர்களின் மசாஜை பார்க்கும் போது, வடிவேலு வின்னர் படத்தில் வரும் காமெடி தான் ஞாபகம் வருகிறது. இதோ இவர்களின் மசாஜுக்கு இணையான வடிவேலு காமெடி.