April 24, 2018
tamilsamayam.com
மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் 52, பென் ஸ்டோக் 40 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் வெற்றிக்கு குறைவான பந்துகளில் அதிக ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில் 8வது வீரராக களமிறங்கிய கிருஷ்ணப்பா கெளதம் அதிரடியாக 11 பந்தில் 33 ரன்கள் குவித்தார்.2 சிக்ஸர்,4 பவுண்டரி என மும்பை பவுலிங்கை சிதறடித்தார்.இவரின் அதிரடியால் மும்பை தோல்வியடைந்து சரணடைந்தது.கெளதமை பாராட்டி பலரும் டுவிட்டரில் பாராட்டு மழை பொழிந்தனர்.