February 4, 2017
tamilsamayam.com
இந்தியாவின் நட்சத்திர பவுலர் அஷ்வினை தான் ஆயுதமாக பயன்படுத்த போவதாக வங்கதேச பவுலர் மெஹாதி மிராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் சாதிக்க வங்கதேச அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
வங்கதேச ஆடுகளத்தின் தன்மையும் கிட்டத்தட்ட இந்திய ஆடுகளத்துக்கு இணையானது என்பதால், வங்கதேச அணி, நிச்சயம் சாதிக்கும் என தற்போதே அந்த அணி வீரர்கள் மனதில் வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி நாயகனாக ஜொலிக்கும் அஷ்வினையே இந்திய அணிக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார் வங்கதேச பவுலர் மெஹாதி மிராஜ்.
இதுகுறித்து மிராஜ் கூறுகையில்,’
அஷ்வின் உலகத்தரமான வீரர். அவரிடம் போட்டிக்கு பின் பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன். தவிர, போட்டியின் ஒவ்வொரு நாளிலும் அவர் பவுலிங் செய்யும் போது மிகவும் கவனமாக கவனிப்பேன். பவுலிங்கில் அவர் பயன்படுத்து உக்திகளை தெளிவாக கவனித்து அதை மிகச்சரியான முறையில் பயன்படுத்துவேன். அப்போது இந்திய அணி தடுமாறும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அவரது அணிக்கு எதிராக அவரையே ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளேன், என்றார்.