April 23, 2019 தண்டோரா குழு
ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியா இதுவரைஆசிய தடகளப் போட்டியில் ஒரு தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.