May 13, 2017
tamilsamayam.com
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
புதுடெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் 60 கி.கி., எடைப்பிரிவின் பைனலில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், ஒலிம்பிக் தங்கம் மங்கை ஜப்பானின் ரிசாகோ கவாயை எதிர்கொண்டார்.
இதில் துவக்க முதல் புள்ளிகள் பெற சாக்ஷி தடுமாறினார். இதை தனக்கு சாதமாக்கிக்கொண்ட கவாய், அடுத்தடுத்து 10 புள்ளிகள் பெற்றார். இதையடுத்து சாக்ஷியால், ஒரு புள்ளி கூட பெற முடியவில்லை.
இறுதியில், 10-0 என்ற கணக்கில் வெற்றியை பறிகொடுத்த சாக்ஷி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி ஆறுதல் அளித்தார்.