August 28, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீரர் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் 10-வது நாளான இன்று ஆண்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கம் வென்றார்.பந்தய தூரத்தை 1.46 விநாடியில் இந்திய வீரர் மஞ்சித் சிங் கடந்து சாதனை படைத்துள்ளார்.இதே போட்டியில் 2வதாக வந்த இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் வெள்ளி வென்றார்.
இதன் மூலம் 9 தங்கம், 17 வெள்ளி,21 வெண்கலம் என 47 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 8 வது இடம் வகிக்கிறது.