August 30, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுயில் ஆடவர் 1500 மீ, பெண்கள் 400 மீ தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆடவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர், நிர்ணயிக்கப்பட்ட 1,500 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 44.72 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
அதைபோல், ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கான 13-வது தங்கப் பதக்கத்தை வென்றனர்.
இதன் மூலம் 13 தங்கம், 20 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.